கோவை அருகே கால்நடை மருத்துவ முகாம் - நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி!

கோவை வீரியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 142 நாய்கள், 8 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டி எஸ்.எஸ் குளம் ஒன்றியம், வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா 2021 22 திட்டத்தின் கீழ், நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி தலைமை வகித்து வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக பேசினார்.

தொடர்ந்து வெறிநோய் தடுப்பு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



அதைத்தொடர்ந்து வெறி நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், ஊர் மக்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் கோவை கோட்ட உதவி இயக்குனர் இளங்கோ பிரதம மருத்துவர் சங்கர் மற்றும் கோவில்பாளையம் கால்நடை மருத்துவர் இளங்கோ முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் மோகன்ராஜ், நித்தியவள்ளி, சபிதா, பவ்யா, ஹேமலதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.



மேலும் முகாமில் 142 நாய்களுக்கும் 8 பூனைகளுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முகாமில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தங்கராஜ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...