கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் திடீர் நிறுத்தம் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் முறையான திட்டமிடலின்றி ரூ.168 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கு மாற்று பயன்பாட்டிற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோவை: கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே ரூ.168 கோடி மதிப்பீட்டில் 50 சதவீதம் அரசு மானியம் மற்றும் 50 சதவீதம் மாநகராட்சி பொது நிதி மூலம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் குப்பை கிடங்கு அருகே பேருந்து நிலையம் அமைவதால் சுதாகார சீர்கேடு ஏற்படும் மற்றும் போக்குவரத்துக்கு உகந்ததாக இருக்காது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், கோவையை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், முன்கூட்டியே பேருந்து நிலையம் அமைய உள்ளது எனக் கூறி பல ஏக்கர் நிலங்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும் தெரிவித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.



மேலும், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டிடங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இக்கட்டிடத்தை மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கான ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்து கோவை மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் கைவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், சுகாதார பிரச்சனை மற்றும் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லாத இடத்தில் வேண்டுமென்றே இத்திட்டம் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வலியுறுத்தலின்பேரில் கொண்டுவரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...