ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் - கோவை அரசு மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை!

ஊதியம் உயர்வு கோரி போராடி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், காவல்துறையை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சு.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாமர்த்தப்பட்ட பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்துப் பேசிய கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா, நேற்று காலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர்கள் அவர்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். காவல்துறையினரை அணுக வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள சம்பள உயர்வுக்கும் அரசு மருத்துவமனைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த சம்பளத்தை கிறிஸ்டல் நிறுவனம் தான் வழங்க வேண்டும். கிறிஸ்டல் நிறுவனத்தினரை அழைத்துள்ளோம். அவர்கள் வந்தபின் அவர்களுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும், என்றார்.

வட மாநில தொழிலாளர்கள் புதிதாக வேலைகளுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிர்மலா, வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என தற்பொழுது நாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...