கோவை அருகே ஷேர் ஆட்டோ மீது காய்கறி ஏற்றிவந்த வாகனம் மோதி விபத்து - தம்பதி படுகாயம்!

கோவை வடவள்ளி அருகே சாலையில் சென்ற பயணிகள் ஆட்டோ மீது காய்கறி லோடு ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.


கோவை பவானி வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி சந்திரா. பொன்னுசாமி பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், பொன்னுச்சாமியும், மனைவி சந்திராவும் வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்றதாக தெரிகிறது.



அப்போது, எதிரே அதிவேகமாக காய்கறி லோடு ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம், பொன்னுசாமி வந்த ஆட்டோ மீது மோதியது.



இதில், ஆட்டோ நிலைக்குலைந்தது தூக்கி வீசப்பட்டதில் பொன்னுச்சாமி , சந்திரா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கவுன்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...