பசு அணைப்பு தின அறிவிப்பு வாபஸ் - இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை

காதலர் தினத்தை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என விலங்கு நல வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்கு,மீம்ஸ்கள், விமர்சனங்கள் எழுந்ததால் பசு அணைப்பு தினத்தை வாபஸ்பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.


உலகெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று `பசு அணைப்பு தினம்’ கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. இதற்கு விமர்சனங்களும், கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.14ஆம் தேதியில், 'பசு அணைப்பு தினம்'கொண்டாட வேண்டும் என வெளியிட்ட அறிவிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாட, இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...