குன்னூரில் வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்ற வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



நீலகிரி: டெல்லியிலிருந்து திரும்பிய வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழமை மிக்கது. இந்த ராணுவ மையம் நாட்டிலே மிகவும் முக்கியமான ராணுவ மையமாகத் திகழ்ந்து வருகிறது. முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு ராணுவ பிரிகளின் சார்பாக பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடைபெற்றது.



இதில் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரஜி மெண்டல் சென்டர் பேண்ட் வாத்திய கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாம் இடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.



இசைக் குழுவினர் இன்று டெல்லியிலிருந்து குன்னூர் திரும்பினர்.



அப்போது ராணுவ முகாம் நுழைவு வாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



மேலும் ராணுவ வாகனத்தில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலிருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் இசைக்க வெற்றிக் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...