உடுமலை அருகே மலைக்கிராமங்களில் சோலார் விளக்குகளை புதுப்பிக்க கோரிக்கை

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் சோலார் விளக்குகளை அதிகாரிகள் புதுப்பித்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



திருப்பூர்: கோடந்தூர், பொருப்பாறுஉள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.



இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.



இவர்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.



அந்த வகையில் மலைவாழ் குடியிருப்புகளுக்கு ஒளி ஏற்றும் விதமாக சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் தொகுதி நிதியிலிருந்து அமைத்து தரப்பட்டது. அதன் பின்பு அதை முறையாக பராமரித்து நடைமுறைப் படுத்துவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் அந்த விளக்குகள் படிப்படியாக பழுதடைந்து தற்போது கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், எங்கள் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை அரசுத்துறைகள் சார்பில் செய்து கொடுப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். ஆனால் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட பின்பு அதனை பராமரித்து முழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை.

இதனால் திட்டங்கள் தொடங்கப்பட்ட வேகத்திலேயே செயலிழந்து பழுதடைந்து காட்சி பொருளாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புகளில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்குகள் அமைத்து தரப்பட்டது. அவற்றை அவ்வப்போது பராமரித்து நடைமுறையில் இருக்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் அந்த விளக்குகள் ஒவ்வொன்றாகப் பழுது அடைந்து தற்போது முற்றிலுமாக அனைத்து விளக்குகளும் காட்சி பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வனவிலங்குகள் தடம் மாறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதை விரட்டி பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது

அப்போது மனிதன் வன விலங்குகள் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் மலைவாழ் கிராமங்களில் ஆய்வு செய்து பழுதடைந்த சோலார் விளக்குகளை புதுப்பித்து கிராமங்களுக்கு இரவில் ஒளியேற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...