கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வலிப்பு நோயால் துடிதுடித்த துப்புரவு பணியாளரால் பரபரப்பு

கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மேரி என்ற தொழிலாளருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அவரை சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்தார்.

அதன்பின்னர் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.



இருப்பினும் பல மாதங்களாக அந்த தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி நேற்று 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



அவர்களிடம் மருத்துவமனை முதல்வர் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.



இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தராபுரத்தைச் சேர்ந்த மேரி என்ற துப்புரவு பணியாளருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்தார்.



இதைப்பார்த்த சக துப்புரவுப் பணியாளர்கள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.



இந்த சம்பவத்தால் அங்குப் பதட்டம் நீடித்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...