கோவை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 24X7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



காமராஜபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,



அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, குழந்தைகளுடன் கலந்துரையாடிய பின்பு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், பொன்னையா நகர் பகுதியில் SRP திட்டத்தின்கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் 607 மீட்டர் அப்பகுதியிலுள்ள தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் உள்ள தார் சாலையினையும், குப்பைகளையும் அகற்றி உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.64-க்குட்பட்ட புளியகுளம், ஜெயநாதன் வீதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் (TURIP 2022-2023) பேஸ்-1கீழ் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவசாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.66-க்குட்பட்ட பந்தைய சாலை, டீ-எஸ்டேட் மற்றும் ஏ.டி.டி. சாலை சாலை பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து, அப்பகுதிகளில் உடனடியாக தார்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், பார்த்திபன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...