கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பள்ளிகளில்‌ மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 10, 11, 12-ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 28 அரசுப் பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 10, 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மார்ச்‌, ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ளது.

அரசு பொதுத்‌ தோ்வுகளை எதிர்கொள்ளத் தயார்‌ செய்யும்‌ பொருட்டு மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 5,608 மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதாரவேல்‌, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ ஜி.மரிய செல்வம்‌, உதவி ஆணையர்‌ மோகனசுந்தரி, மற்றும்‌ பள்ளி ஆசிரியாகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள்‌ மாநில அளவில்‌ நடைபெற்ற பள்ளி கலைத் திருவிழாவில்‌ கலந்து கொண்டு பிறவகை குழு நடனத்தில்‌ பங்கேற்று முதலிடம்‌ பிடித்து வெற்றி பெற்றமைக்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...