தாராபுரத்தில் பழைய மார்க்கெட் இடிக்கும் பணி தீவிரம்

தாராபுரத்தில் பழைய மார்க்கெட் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதிய வளாகம் கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பழைய கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் தினசரி மார்கெட் பகுதியில் ரூ.2.03 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாகம், அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட அரசிடமிருந்து நிதி பெறப்பட்டது.

இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கி புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதால், வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



அதன்படி பழைய மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாகப் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...