கோவை குடிநீர் குழாய்களில் உடைப்பு எதிரொலி - ரேஸ்கோர்ஸ் பகுதியில் தோன்றிய திடீர் நிரூற்றுகள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், நீருற்றுகளைப் போல் பீச்சியடித்து தண்ணீர் வெளியேறி வீணாகியது.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி என்பது கோவை மாநகரின் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டன. மேலும்பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும், மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நிரூற்றுப்போல் பீய்ச்சியடித்து அதிகப்படியான நீர் வெளியேறியது. அதுமட்டுமின்றி குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான குடிநீர் வெளியேறி வீணாகியது.



குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அப்பகுதியில் வெள்ளம்போல் வெளியேறியதால் அப்பகுதியில் நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். அதிகப்படியான நீர் வெளியேறி வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய்கள் பொருத்தப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...