அதானியை பாதுகாக்கிறது பாஜக..! - கோவையில் எம்.எல்.ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

அதானியும், பாஜகவும் ஒன்றா?.. அதானி குறித்த கேள்விக்கு பிரதமர் ஏன் பொங்குகிறார் என்று கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்ஈஸ்வரன் கலந்துகொண்டு, உபகரணங்களை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஈரோடு கிழக்கு தொகுதியில் இ.வி.கே.எஸ்இளங்கோவன் வெற்றி பெறுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன. மக்கள் ஆளுங்கட்சிக்கு விரும்பி வாக்களிப்பார்கள். அந்த தொகுதியில் பணிகள் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு இருக்காது.

எங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்தான் இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள். மறைந்த திருமகன் ஈவேரா, மக்கள் பாசத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளார். அவர் மேல் இருக்கின்ற மதிப்பு, வாக்குகளாக மாறும். ஈவிகேஎஸ் இளங்கோவன் வலிமையான வேட்பாளர் என்றார்.

பேனா விவகாரம் குறித்த சீமான் பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், எதிர்க்கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதே சமயத்தில் அந்த கருத்துக்கள் வன்முறையை தூண்டுவதாக இருக்கக் கூடாது, என்றார்.

அதானி விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,நாட்டில் ஒரு பெரிய தொழில் அதிபர் முறைகேடுகளில் இறங்கியுள்ளார். அனைத்தும் ஆதாரப்பூர்வமாக உள்ளது. தொழிலதிபர் யாராக இருந்தாலும் அதனை விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. அதானியின்தவறுகள், முறைகேடுகளை பற்றி யார் கேள்வி கேட்டாலும்பாதுகாப்பது பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதானியும் பிஜேபியும் ஒன்றா? அதானியைப் பற்றி பேசினால் பிரதமர் மோடி ஏன் பொங்குகிறார்? அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க வேண்டியது அவருடைய கடமை.

நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்றால் அது குறித்து விவாதம் செய்யாமல், மாற்றாக எங்கள் அப்பன் புதருக்குள் இல்லை என்பது போல பிரமதர் நடந்துகொள்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...