கோவையில் வருமானவரித்துறை அதிகாரியாக நடித்த இளம் பெண் கைது - பல லட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதும் அம்பலம்!

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் சீனிவாசராகவன் வீதியில் உள்ள மகளிர் விடுதியில் மதுரை அண்ணா நகர் மேலமடையை சேர்ந்த ராமலட்சுமி (வயது31) என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கியிந்தார்.

எம்.காம். பட்டதாரியான அவர், தான் சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெற்றவர், வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவிடுதியில் உடன் தங்கியிருந்த பெண்களிடம் கூறியுள்ளார்.

அவரது நடை, உடை, பாவனைகளை பார்த்த மற்ற பெண்கள் அதை உண்மை என்று நம்பிவிட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட ராமலட்சுமி, நல்ல சம்பளத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ஆளுக்குத் தகுந்தபடி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளார். ‘அவசர வேலைக்கு தேவைப்படுகிறது’ என்று கூறி இரு பெண்களிடம் லேப்டாப்பையும் அவர்வாங்கிச்சென்றுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களாக ராமலட்சுமியைக் காணாததால், பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்தனர். அதன்பேரில், சிறப்பு எஸ்.ஐ., ஆனந்தமூர்த்தி வழக்கு பதிவுசெய்தார். எஸ்.ஐ., பிரபு தலைமையிலான காவல்றையில் நடத்திய விசாரணையில், ராமலட்சுமி ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரியவந்தது.

தோழியின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதி உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த ராமலட்சுமி, வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் அறிமுகம் ஆகி, அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொக்கோகோலா நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறிக்கொண்ட ராமலட்சுமி, அங்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பீளமேடு இளைஞரிடம் நாலரை லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமலட்சுமியின் இந்தமோசடிக்கு வேறு சிலரும் உடந்தையாக இருந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருவதோடு, மோசடிக்கு பின்னால் உள்ள முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...