கோவை டாஸ்மாக் ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் விவகாரம் - ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை மிரட்டி கைது செய்த போலீஸ்!

கோவை டாஸ்மாக் ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் கரூர் குண்டர்களை கைதுசெய்யக்கோரி அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை மிரட்டி கைது செய்த கோவை காவல் துறை.


கோவை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேரு கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், மாநிலம் முழுவதும் மதுக்கூடங்களை ஏலம் என்ற பெயரில் எடுத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள கரூர் குண்டர்கள் பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து டாஸ்மாக தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதில், கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை பினாமிகள் பெயரில் ஏலம் எடுத்து தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி தினசரி மாமுல் கேட்பதும், உடன்படாத ஊழியர்களை அதிகாரிகளின் துணையோடு பணியிடமாற்றம் செய்வது போன்ற அதிகார அத்து மீறலில் ஈடுபடுவதோடு தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, வருவாய் இழப்பையும் ஏற்படுத்துவதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், டாஸ்மாக் ஊழியர்கள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால், அரசு இதுவரை செவி சாய்க்காமல் மக்களை ஏமாற்றுவது போல், ஊழியர்களையும் ஏமாற்றி வருகிறது.

இனிமேலும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றபடாமல் இருந்தால், பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் கூட்டுக்குழுவுடன் இனைந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும். பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழகம் தழுவிய மாபெறும் போராட்டம் நடைபெறும்.

இந்த போராட்டத்தில் பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராமசுந்தரம், வேலுமணி, ஜீவா, பரமசிவம், கோவிந்தன் மற்றும் அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...