கோவை சம்பள உயர்வு பிரச்சனை - தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்!

கோவையில் சம்பள உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தி, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினமும் 721 ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



3வது நாளாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3வது நாளாகத்தொடரும் இந்தப் போராட்டத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகளை வார்டுகளுக்கு அழைத்துச் செல்வது, அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...