கோவை தொழிலதிபரிடம் அத்துமீறி பணம் பறிப்பு - 2 திருநங்கைகள் கைது

கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற அவர், இரவு 11 மணியளவில் தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது, அருகாமையில் வந்தஇரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பிரதாப் சந்திரனை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும், பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் திருநங்கைகள் பறித்து சென்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதாப் சந்திரன், இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வனிஷா, ரம்யா என்ற இரண்டு திருநங்கைகளை விசாரித்தனர்.அதில், பிரதாப் சந்திரன் குற்றம்சாட்டியது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...