கோவையில் அதிக வட்டி தருவதாகக் கூறி பணமோசடி - எம்.எல்.எம் நிறுவன உரிமையாளர் கைது!

அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த எம்.எல்.எம் நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.

‘முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’என்று அவர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.

இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தன. இந்த நிலையில், எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த கணேசன்(வயது 51) என்பவர் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதில், எஸ்.கே.எம். டிரேடர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர், பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவுசெய்து, நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...