தாராபுரத்தில் 500 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மியாட்டம் - பார்வையாளர்கள் உற்சாகம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தில் 500 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியதை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சங்கிலி ஸ்ரீ கருப்பண்ணசாமி வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் குண்டடம் ஒன்றியம் சிங்காரிபாளையம் தண்டக்காரன்தோட்டத்தில் வள்ளி கும்மியாட்டதின் 50வது அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், ஒரே இடத்தில் 500 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடி, விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடிநடனம் ஆடி அசத்தினர்.



இதைக் காண தாராபுரம், குண்டடம், மேட்டுக்கடை, குமாரபாளையம், பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.சந்திரசேகர குருக்கள் தலைமை வகித்தார்.



இது குறித்துப் பேசிய வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் எல்.ராசு மற்றும் குமார், கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது.

வைகாசியில் கொண்டாடப்படும்கோவில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.

அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்ட கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

கேரளா செண்டை கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. மேலும், அப்பயிற்சி பெற விரும்புவோருக்கு பயிற்சி ஊக்கத்தொகையை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழக அரசும் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி உள்ளிட்டவற்றை கற்க விரும்புவோருக்கு ஊக்கத்தொகை வழங்கி, தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகறியச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...