அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விவகாரம் - நன்னடத்தை பிணை பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய கோவை காவல்துறை!

கோவையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதற்கு ஒரு வருட நன்னடத்தை பிணை பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர் தமது சமூகவலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் தொடர் குற்றச் சம்பங்களில் ஈடுபடுபவர் மீது எடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடப்பவர்கள் மீது 107 மற்றும் 109, 110 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.



இதனடிப்படையில், கடந்த சில நாட்களில் கோவை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் இந்த பிணை பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக ரீதியாக போராடும் மக்கள் மற்றும் அரசியல் அமைப்பினருக்கும் அது பொருத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த கலீம் (வயது45) என்பவருக்கும் இந்த ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக. எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இவர், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இரவு சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சார்பு உதவியாளர் அனுமதி இல்லாமல் சுவரொட்டிகள் ஒட்டுவது குறித்து கேட்டதாகவும், அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து சார் ஆய்வாளர் அளித்த புகார் அடிப்படையில், போத்தனூர் போலீசில் கலீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, இதேபோல் மீண்டும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதி, இந்த நன்னடத்தை பிணை பத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலீம், தனது வலைபக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தற்போது தொடர் குற்றச் சம்பங்களில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என 107 மற்றும் 110 பிரிவுகளில் நன்னடத்தை பிணை பத்திரம் வாங்குகிறார்கள்.

அதில், இதுவரையிலும் பெரிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்படாதவர்கள் மற்றும் சிறை செல்லாதவர்கள் மற்றும் மக்கள் பிரச்சனைக்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், திருட்டு, மோசடி, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவரிடம் வாங்கக்கூடிய இந்த ஒரு வருட நன்னடத்தை பிணை பத்திரம் ஜனநாயக ரீதியாக போராடும் மக்களுக்கும் போடுவது இனி எந்த போராட்டமும் ஒரு வருடத்திற்கு ஈடுபட மாட்டேன், பேசமாட்டேன், எழுத மாட்டேன் என சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.

ஆகவே, தமிழக அரசு இப்படிப்பட்ட மோசமான செயலை கவனத்தில் கொண்டு தவறு செய்யும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து பேசிய போலீசார், சட்ட ஒழுங்குக்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடப்போரின் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இரவு நேரத்தில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டிய கலீமிடம் போலீசார் விசாரித்தபோது முறையான பதில் கூறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால்,வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி தேவாலயத்தில் உள்ள பாதிரியார் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டம், பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்ததால், அந்த பாதிரியாரிடமும் நன்னடத்தை பிணை பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...