கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி - நர்சிங் மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியில் 250க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவ - மாணவியர் கலந்துகொண்டனர்.


கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை சார்பில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.



இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் துரைக்கண்ணன், செயலாளர் கோசல் ராம், பொருளாளர் சீதாராமன், இணைச் செயலாளர் பரமேஸ்வரன், லயன் ராஜசேகர் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை ரேஸ் கோர்ஸ்பகுதியில் உள்ள மாசாணி மருத்துவமனை முன்பு தொடங்கிய இந்த புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி, ஜே.டி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பேரணியின்போது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பாதகைகளை மாணவ-மாணவியர் கையில் ஏந்தியபடி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, ஒருங்கிணைப்பாளர் சிவமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...