நீலகிரியில் 18வது ரோஜா கண்காட்சி ஏற்பாடு தீவிரம் - ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள 18-வது ரோஜா கண்காட்சிக்காக 32 ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி இன்று தொடங்கியது.


நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா நகரமான உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். அப்போது, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவது வழக்கம்.



இந்த நிலையில், உதகை அரசு ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி மே மாதம் நடைப்பெற உள்ளது. இதனையடுத்து ரோஜா பூங்காவில் உள்ள 4201 வகைகளில், 32 ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்தப் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித்தொடங்கி வைத்தார்.



இந்த கவாத்து செய்யும் பணி ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ளது. தற்போது, கவாத்து செய்யும் ரோஜா செடிகள் மீண்டும் நன்றாக வளர்ந்து, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரோஜா மலர்களை பூக்கத் தொடங்கிவிடும்.



கோடை சீசனுக்கு உதகை வரும் சுற்றுலாப் பயணிககள், ரோஜா மலர் கண்காட்சியில்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை கண்டு ரசிக்கும் வகையில் இந்தபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...