மேட்டுப்பாளையம் அருகே பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் அரசு பேருந்தை திடீரென வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



கோவை: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில், 30க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணையும் உள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து வெள்ளியங்காடு மஞ்சூர் சாலை வழியாக பில்லூர் அணைக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றினை காட்டு யானைகள் கூட்டம் திடீரென வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு குட்டிகளுடன் இருந்த ஐந்து காட்டு யானைகள் கூட்டம் திடீரென சாலைக்கு வந்து அரசு பேருந்தை வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.



இதனால், அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வெகுநேரம் பேருந்தினை முன்னேறி செல்ல விடாமல் சாலையிலேயே நடமாடிய யானைகள், பின்னர் வெகுநேரம் கழித்து காட்டுக்குள் சென்றன.



இதையடுத்து, மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. சாலையின் நடுவே யானைக்கூட்டம் வழிமறித்து நின்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...