கோவையில் இரு சக்கர வாகனம் திருட்டு - சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை சின்னாறு அணைக்கட்டு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வேடப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது23). இவர் நேற்று தனது நண்பர்களான கருணாகரன், கௌதம், சஞ்சய் குமார் ஆகியோருடன் இரண்டு வாகனங்களில் ஈஷா நோக்கி சென்றனர்.

முன்னதாக, சின்னாறு அணைக்கட்டை பார்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜீவசமாதி அருகே வண்டியை நிறுத்திவிட்டு அணைக்கட்டை பார்த்துவிட்டு மீண்டும், வந்து பார்த்தபோது குருபிரசாத் வந்த இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அக்கம் பக்கத்தில் கேட்டபோது மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றதாக தெரிவித்தனர். இதை அடுத்து நண்பர்களுடன் நரசிபுரம் சாலையில் சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை மூன்று நபர்கள் தள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதைப்பார்த்த குருபிரசாத் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.



பின்னர், பிடிபட்ட மூன்று பேரையும் ஆலாந்துறை போலீசில் குருபிரசாத் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பூளுவபட்டியை சேர்ந்த ரஜீவன் (வயது21), மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...