வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி - வனத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு!

வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால், வனப்பகுதியில் காட்டுத் தீக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், கொண்டை ஊசி வளைவுடன் சாலையின் விளிம்புகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள காய்ந்த இலைகள் மற்றும் புதர்கள் காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகளை வீசுவதையோ அல்லது உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் தீ மூட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.



மேலும், வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம் சுப்பிரமணி IFS மற்றும் துணை இயக்குனர் பார்கவதேஜா IFS, அறிவுரைப்படி வால்பாறை சரகம் வனச்சரக அலுவலர் வெங்கேட்ஷ் தலைமையில் காடு மற்றும் சாலை இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.



தற்பொழுது வரை சுமார் 50 கிலோமீட்டர் காடம்பாரை முதல் மாவடப்பு, அக்காமலை பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...