ஆம்..நான் தேசதுரோகிதான்..! - கோவையில் 10சதவீதம் இடஒதுக்கீடு எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா பேச்சு

கோவையில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



மாநாட்டில் பேசிய ஆ.ராசா, யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். ஜாதி உளவியலில் வெற்றி பெறுகிறது.

என்னை ஒருவன் தாழ்ந்தவன் என்று சொல்கிறானோ இல்லையோ. தாழ்ந்தவனாகவே நடந்து கொள்வதுதான் உளவியல். இந்த ஜாதிய பண்பை உடைப்பதுதான் சமூக நீதி. அப்படி உடைப்பதற்காகதான் இட ஒதுக்கீடு. அப்படி உடைப்பதற்காகதான் கல்வி.

நான் பெற்ற கல்வியால் சாதியால் என்னை விட உயர்ந்தவன் எவனும் இல்லை, என்னை விட தாழ்ந்தவன் எவனும் இல்லை என்று சொல்ல மாட்டேன்.

நாடாளுமன்றத்தில் பல பேர் வாய்கிழிய பேசுகிறார்கள். 7 லட்சம் கோடி பொருளை வெள்ளைக்காரன் கொண்டுபோய் அங்கு வைத்துவிட்டான் என சசிதரூர் மற்றும் மோடியின் பக்கத்தில் உள்ள அமைச்சர்கள் பேசுகின்றனர்.

அதற்கு நான் கேட்டேன், வெள்ளைக்காரன் எடுத்துக் கொண்டு போவதற்கு எங்கள் வீட்டில் எதுவும் அப்போது இல்லை. வெள்ளைக்காரன் எடுத்துப்போன இரும்பு பிர்லாவிடம் இருந்தது. பிர்லாவிடம் காந்தி இருந்தார். காந்தியிடம் காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் பிராமணர்களிடம் இருந்தது. கல்வி 2 ஆயிரம் 3ஆயிரம் ஆண்டாக மறுக்கப்பட்டது.

மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது. ஆனால், கேட்காமலேயே எங்களது சொத்துக்களை லாவகமாக நாடாளுமன்றத்தில் வைத்து திருடி போகிறீர்களே.. நீ நல்லவனா..? அவன் நல்லவனா..? இதை கேட்டால் சொல்லி விடுவார்கள் ராஜா தேச துரோகி என்று... ஆம்.. நான் தேசத்துரோகிதான்...

பார்ப்பனப் பட்டமும், பர,பள்ளபட்டமும் போய் எல்லோரும் மனிதப் பட்டத்திற்கு வர போராடுவது தேசதுரோகம் என்றால், அதை நான் சாகும்வரை செய்வேன். எது தேச துரோகம்? அப்போது 10 % இட ஒதுக்கீட்டை எடுத்து போயிருந்தால் ராஜா ஓபன் கமிஷனில் வர முடியுமா.?

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர், காந்தியை பார்த்து என்ன ரெப்பிரசன்ட் பண்ண நீ யார் என்றார். அப்புறம்தான் தனித்தொகுதி கொடுத்தார்கள். காந்தி இதற்கு உண்ணாவிரதம் இருந்தார். கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள்.

ஜாதியால் இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டாம் என்றார்கள். அப்போது, அம்பேத்கர் யாரெல்லாம் பின்தங்கி உள்ளார்களோ அவர்களை கவனித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்புதான் சோசியலி எஜுகேஷனல் பேக் வேர்ட் வந்தது.

1800களில் தொடங்கி, பொருளாதார அளவுகோளைக் கொண்டுவர வேண்டுமென பிராமணர்கள் இயங்கினார்கள். இட ஒதுக்கீடு ஆய்வு செய்யும்போதுதான் தெரிகிறது தாழ்த்தப்பட்டவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையில் கள்ளர்களும், சாணார்களும் உள்ளனர் என்பது.

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

இந்த மாநாட்டில், ஆதிதமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் வெண்மணி, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் பொள்ளாச்சி உமாபதி, காசு.நாகராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...