தாராபுரம் அருகே சாலையோர கடைகளில் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூல் - விவசாயிகள் சங்கம் புகார்

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூலித்த நபர்களை கைது செய்யக்கோரி, கோட்டாட்சியரிடம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மனு.


திருப்பூர்: தாராபுரம் - பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தாராபுரம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உட்பட பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை வழங்கினர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கு அருகே சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்த நிலையில், அதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறிவிட்டு, யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

நகராட்சி ஆணையாளரின் செயல் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோர கடைகளில் நாள்தோறும் ஆக்கிரமிப்பு கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்வது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க சென்ற தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் நகர தலைவர் ராசு, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமூர்த்தி உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...