வெளிமாநிலத்தவரை பணியமர்த்தும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தாராபுரத்தில் மாவட்ட நீதிபதி கருத்து!

தாராபுரத்தில் நடைபெற்ற கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட நீதிபதி நாகராஜன், செங்கல் சேம்பர்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.


திருப்பூர்: வெளி மாநிலத்தவரை பணியமர்த்தும் போது விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என திருப்பூர் மாவட்ட நீதிபதி நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் அருகே வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று முகாம் நடைபெறும் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் பேசியதாவது, செங்கல் சேம்பர்களில் பணியாற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் தொழிலாளர் நலத்துறையின் சட்ட திட்டத்தின் அனைத்து சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் உரிய கல்வியை அளிக்கும் நோக்கத்தில் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே தவிர குழந்தை தொழிலாளர்களாக அவர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஏதாவது சான்றிதழ்கள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது என்றால், உடனடியாக சட்டப் பணிகள் குழு மூலம் தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளும் விரைவாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் துணை இயக்குனர் எஸ் சந்தோஷ் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கண்ணன் தாராபுரம் மூத்த வழக்கறிஞர் எஸ் கே .கார்வேந்தன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி. கலைச்செழியன், செயலாளர் வாரணவாசை,



மூத்த வழக்கறிஞர் செயற்குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லா, செங்கல் சேம்பர் தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகி அர்ஜுனன் மற்றும் செங்கல் சேம்பர் உற்பத்தியாளர்கள் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...