கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து - அதிமுக நிர்வாகி உயிரிழந்த சோகம்!

கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவில் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பு கம்பி மீது மோதிய விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அடுத்த திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62). இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார்.

இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகுமார் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவு பகுதியில் கோவை - பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்தில்தனது நண்பர் ரமேசுடன் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகுமார் ஓட்டிச் சென்ற நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது, நாயின் மீது இருசக்கர வாகனம் மோதிய நிலையில், கிருஷ்ணகுமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



விழுந்த வேகத்தில் சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியதில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த ரமேஷ் சாதாரண காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...