உடுமலை அருகே விளைநிலங்களில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்!

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் விளைநிலத்தில் பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியேறும் துர்நாற்றத்துடன் கூடிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை விளைநிலங்களுக்கு அருகே எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் சூரியப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. இந்நிலையில் அவர், தனது நிலத்தை விவசாயம் செய்வதற்கு ஏற்றார்போல், உழுது தயாராக வைத்திருந்துள்ளார்.



இதனிடையே அந்த நிலத்தின் அருகில் வசிக்கும் நபர்கள் ஒருவித பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல்வேறு கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டி இரவு நேரங்களில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.



இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கடும் துர்நாற்றத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மூச்சுத் திணறால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களில் மேயும் கால்நடைகள் மற்றும் விவசாய பயிர்களும் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார துறையினர் உடனடியாக சின்னவாளவாடி பகுதியில் உள்ள விளை நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...