போரில் வீரமரணமடைந்த உதகை ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் நினைவுநாள் - ஆட்சியர் நேரில் அஞ்சலி!

2001ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற ஆப்ரேஷன் மேக்தூத் போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவு நாளில் நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கப்பத்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ராணுவ வீரரான இவர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஆன 16,200 அடி உயரத்தின் இமயமலை பனிப்பொழிவில் பணியாற்ரி வந்துள்ளார்.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு சியாச்சின் - கிளாசியர் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்த ஆப்ரேஷன் மேக்தூத் என்ற போரில் ராமகிருஷ்ணன் வீரமரணம் அடைந்தார்.

வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்த ஊரான கப்பத்தொரை கிராமத்தில் உடல் கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இதனிடையே, போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு முதல் ராணுவ முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று நடைபெற்ற 21-வது நினைவு தினத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், குன்னூர் வெலிங்டன் ராணுவ அகாடமி கமாண்டண்ட் எம் சி ஐயப்பன், உதகை நகர மற்றும் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் பள்ளி மாணவர் மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தி, ராணுவ வீரரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வின் போது ராமகிருஷ்ணனின் தாயார் சுப்புலட்சுமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர், அப்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், இந்திய தாய் நாட்டிற்காக மழையிலும், கடும் பனிப்பொழிவிலும் தொடர்ச்சியாக போராடிவரும் சூழ்நிலையில் ராணுவ வீரர்களுக்கான அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...