நொய்யலாற்றை மீட்க மாவட்ட வாரியாக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் - கோவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

நொய்யலாற்றை மீட்க வரும் மார்ச் 22ஆம் தேதி பத்து லட்சம் கையெழுத்துடன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.



கோவை: நொய்யலாற்றை மீட்க பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.



பசுமை தாயகம் அமைப்பு சார்பில் "நொய்யலாறு" மீட்பிற்கான கருத்துரையாடல் கூட்டம் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பசுமை தாயகத்தின் தலைவர் செளமியா அன்புமணி கலந்துகொண்டு விவசாயிகள், தொழிற்துறையினர், சமூக, சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு குழுக்களுடன் கலந்துரையாடினார்.



இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செளமியா அன்புமணி பேசியதாவது,

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் "கொங்கு செழிக்கட்டும் நொய்யல் செழிக்கட்டும்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொண்டு கடந்த மாதம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு கூட்டம் நடந்தது.

இந்த நொய்யல் ஆற்றை மையப்படுத்தி உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம்.

நொய்யல் ஆற்றை காப்போம் நிகழ்வில், நொய்யல் ஆற்றை மீட்பதில் நொய்யல் ஆற்றை எவ்வாறெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு நிறைய கருத்துகளை எடுத்து வைத்தனர்.

குறிப்பாக மாவட்ட வாரியாகவோ அல்லது தாலுக்கா வாரியாகவோ, தொழில்நுட்ப வாரியாகவோ ஒரு ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

குறைந்த செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் ,மூன்றாம் கட்டம் என பல விஷயங்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

நொய்யலாற்றை மீட்க பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்ற முடிவு செய்யபட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற குறைந்தபட்ச திட்டம் குறித்தும் பேசி கொண்டிருக்கிறோம்.

நொய்யலாறு பிரச்சனையை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் பார்க்க வேண்டும், பிரதமரை கூட பார்க்க வேண்டும் என கூட கருத்துகள் கேட்கப்பட்டது.

அடுத்த கட்டத்திற்கு செல்ல விருக்கிறோம், அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக இணைந்து ஒரு விஷயத்தை தான் பேசினோம். எத்தனையோ எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அதையும் இன்று காது கொடுத்து கேட்டுள்ளோம்.

விவசாயம், தொழில் செய்பவர்கள், நகரவாசிகள், கிராமத்தில் இருப்பவர்கள் யாரையும் ஒதுக்காமல் அனைவரும் உள்ளடக்கிய திட்டம் வேண்டும்.

காலக்கெடு இந்த கூட்டமைப்பில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என பேசலாம் ஆனால் மாதம் ஒரு கூடி என்னென்ன செய்யலாம் என பேசலாம் என யோசித்து வைத்துள்ளோம். அரசியல் கட்சிகளில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்து வருவார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தான் முயற்சி செய்து வருகிறோம். இன்று சமூக அமைப்புகள் மட்டும் தான் ஒன்றிணைந்திருக்கறோம் விரைவில் அரசியல் கட்சிகளை சந்திப்போம்.

நாங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் நல்ல முறையில் முடித்து காட்டுவோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

அதிகமான ஆய்வுகள் நொய்யல் ஆற்றை பற்றித்தான் செய்துள்ளோம். கையழுத்து இயக்கம் உத்தேசமாக மார்ச் 22 உலக நீர் நாளில் துவங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...