தாராபுரம் அருகே பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்குதல் - அணையில் வீசப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மர்ம பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்கிய நிலையில் இறந்த பன்றிகளின் உடல்களை நல்லத்தங்கால் ஓடை நீர்த்தேக்க அணையில் வீசிச் சென்றதால் பரபரப்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணை. இந்த அணைக்கு பழனி சண்முகா நதி பகுதியில் மழை பெய்யும் போது உபரி நீர் அணைக்கு வந்து சேர்கிறது.



இந்த அணையின் மூலம் 6,300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதேநேரம் குமாரபாளையம் கரையூர் பெரமியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் நல்லதங்காள் ஓடை அணை வாய்க்கால் பகுதியில் செந்தில், ரவி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் குடிசை போட்டு பன்றி வளர்ப்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மர்ம காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பன்றிகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இறந்துள்ளது.

இறந்த பன்றிகளை பன்றி வளர்க்கும் நபர்கள் குழி தோண்டி புதைக்காமல் இறந்த பன்றிகளை நல்லதங்காள் அணை வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர். இதனால் வாய்க்காலில் சென்று கொண்டிருந்த தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

அணையின் தண்ணீரைபயன்படுத்தி வந்த கிராம மக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அணைப்பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்த நிலையில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பொன்னிவாடி கிராமம் முழுவதும் கால்வாய் தண்ணீரை பயன்படுத்திய கிராம மக்களுக்குவயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு வருவதாகவும் அதனால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பொன்னிவாடி கிராமத்திற்கு வந்து மருத்துவ குழுவுடன் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் நல்ல தங்காள் நீர் ஓடை வாய்க்காலில் நோய்வாய் பட்டு இறந்த பன்றிகளை தூக்கி எறிந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடியாக நோய்வாய்ப்பட்டு இறந்த பன்றிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...