பல்லடம் அருகே தனியார் மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த முத்தாண்டி பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், நூல்கள், பஞ்சுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.



பல்லடம் அருகேயுள்ள முத்தாண்டிபாளையம் கிராமத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.ஆர் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென இந்த நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது.



நூற்பாலையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த நூல்கள், பஞ்சுகள் என அனைத்தும் கருகி சேதமடைந்துள்ளன. மேலும் மீதமூள்ள நூல் மற்றும் பொருட்களை தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

நூற்பாலை முழுவதும் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்துக்கான காரணம் என்ன குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...