கோவை பவானி ஆற்றில் ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் நண்பர்களுடன் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் என 5 பேர் ஒரே நாளில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றில் இருவேறு சம்பவங்களில் 3 பெண்கள் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது தங்கை பாக்கியா (45) சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார்.

இந்நிலையில் பாக்கியா தனது வீட்டிற்கு பால் காய்ச்சுவதற்காக இவரது மருமகள் ஜமுனா (25) மற்றும் நண்பர்களான நரசிம்மநாயக்கன் பாளையத்தை கஸ்தூரி (30), சகுந்தலா (40) ஆகியோர் சிறுமுகைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில். பாலகிருஷ்ணன், பாக்கியா, ஜமுனா, கஸ்தூரி மற்றும் சகுந்தலா ஆகிய 5 பேரும் சிறுமுகை வச்சினாம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கே இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



இந்நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாக்கிய(53), சகுந்தலா (40), ஜமுனா (30) ஆகியோர் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோரை மீட்ட பொதுமக்கள் இருவரையும் மேட்டுபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதேபோல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமம் உப்புபள்ளம் பவானி ஆற்றில் மாலை 6 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உப்பிளிபாளையத்தை சேர்ந்த கெளதம் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் பரிசல்காரர்கள் சிறுவர்களின் உடலை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவங்களில் 5 பேர் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...