சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவை - முன்னாள் எம்.பி-க்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல்!

கோவையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவர் என்ற கட்டிடத்தில் 3 கடைகளுக்கான சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் சுமார் ரூ.1.25 கோடி சொத்து வரி நிலுவை காரணமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி சொத்து வரி வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்து வரி கட்டாத வணிக வளாகங்களில் இருக்கும் கடைகளுக்கு சீல் வைத்து வருகிறது.



இதனிடையே கோவை மாநகராட்சி எல்லைகளில் சமீப காலமாக சொத்து வரி கட்டாத கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்து உள்ளது. இந்த நிலையில் ரூ.1.25 கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி., பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவரில் உள்ள 3 கடைகளுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



மேலும் சீல் வைத்த கடைகளுக்கு முன்பு சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே வளாகத்தில் உள்ள சில கடைகளை விற்பனை செய்து விட்டதாகவும், அதற்கான வரியை அந்த கடை உரிமையாளரே செலுத்துவார்கள் என தெரிவித்தார்.

ஆனால் விற்பனை செய்யப்பட்ட கடை உரிமையாளரின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் சேரன் டவர் பெயரிலேயே இருப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

சொத்து வரி பாக்கியின் காரணமாக முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...