திருப்பூர் உடுமலையில் மக்கள் நீதிமன்றம் - 158 வழக்குகளுக்கு சுமார் ரூ.4 கோடிக்கு தீர்வு

உடுமலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கச்சேரி வீதியில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றம் 4 அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஜே.எம் 1 நிதிபதி விஜயகுமார், ஜே.எம். 2 நிதிபதி மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி சிறு குற்றத்துக்குரிய 77 வழக்குகள் ஒரு லட்சத்து 22ஆயிரத்து 200க்கும், காசோலை மோசடி குறித்த 22 வழக்குகளில் பத்து வழக்குகளுக்கு ரூ.42 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது.

வங்கி வாராகடன் குறித்த 25 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு 63 லட்சத்து 66 ஆயிரத்து 608 ரூபாய்க்கும்,மோட்டார் வாகன விபத்துக்கள் குறித்த 95 வழக்குகளில் 42 வழக்குகள் ரூபாய் 2 கோடி 67 லட்சத்து 52 ஆயிரத்து 533க்கும் தீர்வு காணப்பட்டது.

மனமுறிவு தொடர்பான 10 வழக்குகளில் மூன்று வழக்குகள் இரண்டு லட்சத்து 38 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் 52-ல் 11 வழக்குகள் 81 லட்சத்து 18 ஆயிரத்து 546 ரூபாய்க்கும் தீர்வு காணப்பட்டன.

மொத்தம் 281 வழக்குகள் எடுக்கப்பட்டு 158 வழக்குகளுக்கு நான்கு கோடியே 58 லட்சத்து 72ஆயிரத்திற்கு 887 தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வழக்கறிஞர்கள் சேதுராமன் ரவிச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சத்தியவாணி உள்ளிட்ட இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த, இளம் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...