திருப்பூர் பல்லடம் அருகே அனுமதியின்றி, உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் மலர் கண்காட்சி!

பல்லடம் அடுத்த மங்கலம் சாலையில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பின்றியும் நடைபெறும் மலர் கண்காட்சி குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில்மலர் கண்காட்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் அடுத்த மங்கலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மலர் கண்காட்சி கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாட கூடிய ராட்டினம், பேய் வீடு போன்றவை இடம் பெற்றுள்ளன.



இந்த கண்காட்சி நடக்கும் தனியார் மண்டபம் மங்கலம் சாலையில் இருந்து குறுகிய சாலையில் அமைந்துள்ளதால் கண்காட்சி நடைபெறும் இடத்தில் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தாமல், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட வர முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசலோடு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

பல்லடம் நகராட்சி ஆணையரிடமோ, வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.



மேலும் குழந்தைகள் விளையாடும் ராட்டினத்தை இயக்க பயன்படுத்தப்படும் என்ஜின், டீசல் கேன் உட்பட திறந்தவெளியில் தீ விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை காண வரும் பொது மக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை,தீயணைப்பு வாகனம் போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது இந்த மலர் கண்காட்சிக்கு எங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை எனவும் கண்காட்சி நடப்பதே எங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.



மேலும் கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை குறுகிய சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றால் ஆம்புலன்ஸோ தீயணைப்பு வாகனமோ உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய சாலை என்பதால் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே உள்ளே இருப்பவர்களை மீட்க முடியும் என கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று மங்கலம் சாலையில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினம் அறுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...