நீலகிரி முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலி - பொதுமக்கள் அச்சம்!

முதுமலை தெப்பக்காடு பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவரை புலி அடித்து கொன்ற நிலையில், தெப்பக்காடு ஆற்றங்கரையோரத்தில் புலி ஒன்று உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

முதுமலை தெப்பக்காடு அடுத்த யானைபாடி பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண்மணி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது, புலி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெப்பக்காடு, யானைப்பாடி பகுதியில் புலியை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் 4 புலிகள் நடமாடுவது கேமராவில் பதிவான நிலையில் பெண்ணை தாக்கிய புலி எது என கண்டறிய வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.



இதனிடையே நேற்று மாலை தெப்பக்காடு ஆற்றங்கரையோரம் புலி உலா வந்ததுள்ளது. இதை கண்ட கிராமத்தினர் பெண்ணை தாக்கிய புலியாக இருக்கலாம் என மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புலா உலா வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...