தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வகையான 117 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி தாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் தேசிய மக்கள் சிறப்பு நீதிமன்றம், தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தாராபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.நாகரஜன் தலைமை தாங்கிய நிலையில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வழங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 24 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 79 உரிமையியல் வழக்குகள், ஜிவனாம்ச வழக்குகள் 4, குடும்ப வன்முறை, மணி சூட் 1, குடும்ப வழக்கு 1, செக் மோசடி வழக்குகள் 4 என குற்றவியல் சிறு குற்றங்கள் உள்ளிட்ட 117 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கான சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குக்கான சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மூலனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மோகன் ராஜ் (45) கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தார். இவருடைய மனைவி பீலா புனிதவதி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்ததையடுத்து நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் இறந்து போன மோகன் ராஜூக்கு அதிகபட்சமாக காப்பீட்டுத் தொகையாக ரூ.95 லட்சத்தை அவருடைய மனைவி பீலா புனிதவதி மற்றும் மகள், தாயார் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாதாடி பெற்று தந்த வழக்கறிஞர் கோவி இளஞ்செழியன் மற்றும் எஸ்.டி.சேகருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன் மற்றும் செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...