பரோட்டாவை தொடர்ந்து, ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே பரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக அரசு கொண்டு வந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கான மற்றும் மாணவ, மாணவிகளுக்கான ஏராளமான நலத்திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஈரோடு வள்ளலார் வீதி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார். அப்போது, உடற்பயிற்சி செய்தவாரே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.



உடற்பயிற்சி செய்து ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சரின் செயல் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே, பரோட்டா கடையில் பரோட்டா போட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...