டிஜிட்டல் சினிமாவை கையிலெடுத்தவர் கமலஹாசன் - இயக்குநர் பா.ரஞ்சித்

நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு நகரத்தியவர் கமலஹாசன் என தெரிவித்துள்ளார்.



சென்னை: சென்னை எழும்பூரில் இன்று (12.2.2023 )இயக்குநர் பா.ரஞ்சித் 'நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு நடிகர் கமல்ஹாசன் வருகை புரிந்து புத்தக விற்பனையகத்தை திறந்து வைத்தார். திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நேற்றுதான் நான் சென்று இந்த நிகழ்ச்சிக்கு வரமுடிமா என்று கேட்டேன்; ஆனால் நான் தைரியமாக சென்றேன்.காரணம் சாரை நான் சினிமா நிகழ்ச்சிகள் எதுக்கும் அழைக்க செல்லவில்லை.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததுதான் என்னை சினிமாவ நோக்கி நகர்த்தியது. அப்படி வாசிக்கும் போது நமக்கு மிகப்பெரிய ஆளுமைகள் மீது நமக்கு ஆர்வம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருவராக நான் கமல்ஹாசன் சாரை பார்க்கிறேன். கமல்ஹாசன் சாரின் சினிமாக்களை கட்டம் கட்டமாக பிரித்தாலே, நாம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

எனக்கு அவருடைய எழுத்து பாணி பெரிய வியப்பை உண்டாக்கி இருக்கிறது; குறிப்பாக விருமாண்டி படம். எப்படி அவர் அந்தப்படத்தில் அப்படியான கட்டமைப்பை உருவாக்கினார்; எப்படி அவரால் வந்த வாழ்க்கையை உள்வாங்க முடிந்தது என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அதே போலதான் மகாநதியும்.



யதார்த்த சினிமாவை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் கமல்ஹாசன் சாரின் பங்கு மிக முக்கியமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார். எல்லோரும் டிஜிட்டல் சினிமாவை கையிலெடுக்க பயந்த காலத்தில் முதலில் டிஜிட்டலை கையில் எடுத்தவர் கமல்ஹாசன்.

புத்தகங்கள் சாதரணவிஷயமல்ல; குறிப்பாக அம்பேத்கரை நான் வாசித்த பின்னர்தான் நான் யார் என்ற கேள்வி எனக்கு வந்தது. அந்தக்கேள்விகளுக்கான பதில்கள்தான் என்னுடைய படைப்புகள் ஒரு மனிதன் தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நிச்சயமாக புத்தகங்கள் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

வீடியோவை விட எழுத்து பவர் ஃபுல்லானது என்று நான் நம்புகிறேன். எழுத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால் திரைப்படமாக மாற்ற முடியாது. இங்கு அரசியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...