வனத்துறை சார்பில் மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாகவும், வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.


திருப்பூர்: காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்டத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.



இதைக் கருத்தில் கொண்டு திருப்பூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும், வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும், குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ், கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...