கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் பற்றி எரிந்த மரத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பச்சை மரம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.



கோவை: கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதி அருகே பற்றி எரிந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாலையோர மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருவது வழக்கம்.இந்த நிலையில் இன்று மாலை மரத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பச்சை மரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

மரத்தில் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரினை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மரத்தின் அடியில் குப்பைகள் கொட்டிய இடத்தில் யாரோ தீ வைத்த உள்ளனர்.அதன் காரணத்தால் மரம் தீ பிடித்து எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் உதகை சாலையில் திடீரென பச்சை மரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...