ஆழியார் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆனைமலை வட்டம், ஆழியார் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 240 கோடி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் 429 வீடுகளை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றினார்.

ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 397 வீடுகள் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 112 வீடுகள் என மொத்தம் 429 வீடுகள் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வருகின்றது.

ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...