காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்ததால் பரபரப்பு

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஓவியங்களில் கோவலன் மரணத்திற்கும், திருடியதிற்கும், பொற்கொல்லர்கள் தான் காரணம் என்பதைப் போன்று பொற்கொல்லரை இழிவுபடுத்தி தவறாகச் சித்தரித்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறி விஸ்வஜன முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது கருப்பு மையை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் ஓவியங்களை மையை ஊற்றி அளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஓவியர்களைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சிரமப்பட்டு வரையப்பட்ட ஓவியத்தை சில நொடிகளில் அளித்து சின்னாபின்னம் ஆக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரே உள்ள தூண்களில் வரைந்த ஓவியத்தை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் மையை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...