கோவையில் இரண்டு நாட்கள் சிறப்பு வரி வசூல் முகாம்- ஆணையாளர் தகவல்

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மாநகரில் இன்று மற்றும் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.



கோவை: கோவை மாநகராட்சி சார்பில் இன்றும்,நாளையும் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

கோவையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் இன்று மற்றும் நாளை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்களை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அனைவரும் செலுத்த வேண்டும்.

மார்ச் 31-ந் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மாநகரில் இன்று மற்றும் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்தில் 5-வது வாா்டு விசுவாசபுரம் பகுதி, 55-வது வாா்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சிப் பள்ளி, 56-வது வாா்டு சுங்கம் மைதானம், ஒண்டிப்புதூரில் 57, 58-வது வாா்டு நெசவாளா் காலனி, மேற்கு மண்டலத்தில் 34-வது வாா்டு, மஞ்சீஸ்வரி காலனி, கவுண்டம்பாளையம். விநாயகா் கோவில் வளாகம், 35-வது வாா்டு, இடையா்பாளையம், அண்ணா நகா் ஹவுஸிங் யூனிட், 39-வது வாா்டு, சீனிவாசப் பெருமாள் கோவில் வளாகம், கவுண்டம்பாளையம்.

40-வது வாா்டு, வீரகேரளம் சித்தி விநாயகா் காலனி, விநாயகா் கோவில், தின்மையா நகா். தெற்கு மண்டலத்தில், 88-வது வாா்டு, குனியமுத்தூா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, 94-வது வாா்டு, மாச்சம்பாளையம் விநாயகா் கோவில் திடல் பகுதி.

வடக்கு மண்டலம் 11-வது வாா்டு ஜனதா நகா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 15-வது வாா்டு சுப்பிரமணியம் பாளையம் வாா்டு அலுவலகம், 19-வது வாா்டு மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25-வது வாா்டு காந்திநகா் அரசு மேல்நிலைப்பள்ளி, 28-வது வாா்டு, ஷோபா நகா் வாா்டு அலுவலகம், 29-வது வாா்டு அரிமா சங்கம்.

மத்திய மண்டலத்தில் 32-வது வாா்டு சிறுவா் பூங்கா, சங்கனூா் நாராயணசாமி வீதி, 62-வது வாா்டு, சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது வாா்டு, பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80-வது வாா்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 84-வது வாா்டு, ஜி.எம்.நகரில் உள்ளதா்ஹத் இஸ்லாம் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் மையம் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...