கோவையில் வழிப்பறியில் ஈடுபட முயற்சி - குருவி சுடும் துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலித்தொழிலாளிகள்!

கோவையில் குருவி சுடும் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற சமயபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்து வந்த நிலையில், குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்காக வழிப்பறியை தேர்வு செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக சென்ற போது, சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அந்த 3 பேரும் குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார், உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்களில், சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இந்த 3 பேரும் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வந்ததோடு, அவ்வப்போது குருவி சுடும் வேலையிலும் ஈடுபட்டுவந்துளள்னர்.

இந்த குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என அவர் திட்டமிட்டிருந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...