ஏ.டி.எம்களில் கொள்ளை எதிரொலி - கோவை வாளையாறு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கோவையில் கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி மற்றும் வாளையாறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கஅம்மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ஆந்திரா மற்றும் கேரளா எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட எல்லையான கருமத்தப்பட்டி, கணியூர் சுங்கச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியை துவங்கிய நிலையில் வாளையாறு எல்லையிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியே செல்லும் கார்களும் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையின்போது,சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்களின்முகவரிகளையும் போலீஸார் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...