கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் படுகொலை - செல்போன் வீடியோ வெளியீடு

கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே கோபாலபுரத்தில், வழக்கு விசாரணைக்காக வந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக இளைஞர்களை வெட்டிய செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.



கோவை: கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ளவர்கள். இருவரும் வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த நிலையில், நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் இருவரும் தேனீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியான கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்சில் அனுப்பி வைத்தனர். கொலை நடத்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், உயிரிழந்த கோகுல், தமது இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

நீதிமன்றத்திற்கு வந்த இளைஞர்களை, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகம் அருகே பட்டபகலில் நடந்தேறிய இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...